spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம்"... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம்”… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

-

- Advertisement -
இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதளப் பதிவில், தூங்கி வழிந்த நிர்வாகத்தால் – மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்! இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல்  ஆட்சிக்காலம்! என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் – திண்டிவனம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
   

MUST READ