spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – கொந்தளித்த டி.டி.வி.தினகரன்

அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – கொந்தளித்த டி.டி.வி.தினகரன்

-

- Advertisement -

மதுரையில் தனது தேநீர் கடை முன்பாக மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை –  தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றிட வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது தான் ஒரே தீர்வு என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – கொந்தளித்த டி.டி.வி.தினகரன்இது குறித்து அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாமநத்தம் அருகே அதிமுகவின் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் தனசேகர பாண்டியன் என்ற செந்தில் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இதே மதுரையில் ஜெய்ஹிந்த் புரம் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில்  இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாகச் சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தனது தேநீர் கடையின் முன்பு மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

தமிழகத்தை கொலை நகரமாக மாற்றியதோடு சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், வெற்று விளம்பரத்தில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, மதுரை அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு, எஞ்சிய நாட்களிலாவது தமிழக மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கித் தந்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்“ என்று அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

MUST READ