அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டிருப்பதற்கு வன்மையான கண்டனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஒன்றிய பாஜக அரசின் இந்த கைது நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். சீனாவிடம் வாங்கிய ஏஐ ரோபோவை தாங்கள் செய்ததாக கல்கொடியாஸ் பல்கலைக்கழகம் டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சிமாநாட்டில் காட்சிப்படுத்தியதை கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் பின்னணியில் அவரை கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவை இந்திய அரசியலமைப்பால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள். அவற்றை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயகத்தின் மாண்பிற்கு எதிரானது. இளைஞர்களின் குரலை மௌனப்படுத்தவும், எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் ஆட்சியாளர்கள் முயற்சி செய்வதாக உதய் பானு சிப் கைது காட்டுகிறது.
இது நாட்டின் ஜனநாயக மரபுகளுக்கு ஆபத்தான முன்னுதாரணமாகும். உதய் பானு சிப் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அரசியல் வேறுபாடுகளை அடக்குமுறையால் சமாளிக்காமல், ஜனநாயக முறையில் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்” என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.
இனி வீட்டை விட்டே வரமாட்டேன்! விஜய்க்கு பட்டை நாமம் அடித்த வேலூர் மீட்டிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!



