மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் வர்த்தகர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
மதுரையை மைய்யமாக கொண்டு 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் வரவேற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் “விக்கிரமராஜா எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் நான் தட்டாமல் செல்வதுண்டு, விக்கிரமராஜா வணிகர்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார், விக்கிரமராஜா வணிகர்களின் நலனுக்காக செயல்படுபவர் மட்டுமல்ல, திராவிட மாடல் அரசின் நல்லெண்ண துதுவராகவும் செயல்பட்டு வருகிறார், திராவிட மாடல் அரசு வணிகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்துள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன், சமச்சீரான வளர்ச்சிக்கு தமிழக அரசுக்கு வணிகர் சங்கங்களின் ஆதரவு மிக முக்கியமானதாகும்,
வர்த்தகர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை விசாரிக்க தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு