spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது. புதைந்து கிடக்கும் மர்மங்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளாா்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுஜன் சமாஜம் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டது குறித்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ள மர்மங்கள் அனைத்தும் தெளிவாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே அவரது கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதை விட, உண்மைக் குற்றவாளிகளை பாதுகாப்பதில் தான் காவல்துறை தீவிரம் காட்டியது. உண்மைகள் வெளிவந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்படுவதை சி.பி.ஐ. உறுதி செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைத்தால், சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது“ என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

தரமான சம்பவம் காத்திருக்கு…. ‘இட்லி கடை’ படத்தின் ரன்னிங் டைம் இதுதான்!

we-r-hiring

MUST READ