தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவான தகவல்களை வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,59,093 பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆகும். இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் 1,06,408 இவிஎம் இயந்திரங்கள், 75,064 கட்டுப்பாட்டு அமைப்புகள், 75,064 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தபட உள்ளது. 20 சதவீதம் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. 75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
3 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 83 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 300 கம்பெணி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
63 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1262 கோடி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் தொடர்பாக 143 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2180 யூஆர்எல் முடக்கப்பட்டுள்ளது. 249 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள், 325 முழுமையாக பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையங்கள், 71 மாற்றுதிறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையம், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 5949 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளது.
வாக்காளர் பல்வேறு தகல்களை தெரிந்து கொள்ள தேர்தல் வழிகாட்டி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://votervazhikatti.tn.gov.in/ வாக்களர்களுக்கு தேவையான வசதிகள் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்தினார்.
