Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்...!

கோவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்…!

-

கோவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்...!கோவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஓய்வின்றி உழைக்கும் இயந்திரங்களை பூஜை தோரணங்கள் பொருட்களால் அலங்கரித்து வழிபடும் தொழிலாளர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்வதற்கு இணங்க, தங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இயந்திரங்களை வழிபடும் விதமாக சிறுகுறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் அரங்கேரி இருக்கின்றது.

கோவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்...!தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று கோவையில் பிரபலமான பண்டிகை ஆயுதபூஜை. லட்டக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்கு ஆயிரக்கணக்கான மெசின்களுக்கு ஆயுதபூஜை உணர்வுப்பூர்வமாக சிறுகுறு தொழில் கூடங்களில் வருடந்தோறும் நடக்கும்.

கோவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்...!இந்த நிலையிலே, இந்த வருடமும் கோவையில் இயங்கி வரும் மின் மோட்டார், பம்பு செட், டெஸ்டைல் உதிரி பாகங்கள், வாகன உதிரி பாகங்கள், மிக்ஸி , கிரைண்டர் உள்ளிட்ட தயாரிப்புகளில் ஈடுபடுகின்ற ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் உள்ள இயந்திரங்களுக்கு வாழை மரம் , பூ மாலை , கலர் காகிதங்கள் அணிவித்து, சந்தனம் குங்குமம் இட்டு தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆயுதபூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆயுதபூஜை விடுமுறையையொட்டி குமரியில் படகில் சவாரி செய்ய குவிந்த மக்கள்…!

இரண்டு நாட்களாகவே மெஷின்களை ஆயுத பூஜைக்கு தயார் படுத்திய தொழிலாளர்கள், மிஷின்களை சுத்தம் செய்து முறையாக பராமரித்து ஆயுத பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். வருடம் முழுவதும் ஓய்வின்றி உழைக்கும் இயந்திரங்களுக்கு இன்று ஒரு நாள் ஓய்வு கொடுத்து உரிய மரியாதை செய்கின்றனர்.

இந்த நாளில் மிஷின்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் புதிதாக இணைக்கப்பட்டு, மெசின்கள் பராமரித்து தொழிலாளர்களால் தணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு, அடுத்த ஓராண்டுக்கு அந்த மெஷின் சிறப்பாக உற்பத்தி பணியில் ஈடுபட தொழிலாளர்கள் இந்த நாளில் வேண்டிக்கொள்வார்கள். தொழில் நெருக்கடி நீங்கி இந்த வருடம் தொழில்த்துறைக்கு சிறப்பான வருடமாக அமைய வேண்டும் என சிறு சிறு தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் வேண்டிக் கொண்டனர் .

 

உடலின் ஓர் அங்கமாக மெசின்களை பாவித்து பராமரிப்பதாக தெரிவித்த தொழிலாளர்கள், வருடந்தொறும் உழைக்கும் மெசின்களுக்கு ஒரு நாள் ஓய்வு தருவதாகவும், முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் மெசின்களுக்கு உரிய மரியாதை செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

 

நெருக்கடியான ஜி. எஸ். டி. வரி விதிப்பை குறைக்கவும், தொழில் செய்ய உரிய எளிய நடைமுறைகளை பின்பற்றவும், சிறு குறு தொழில்களுக்கான மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை அரசாங்கங்கள் குறைக்க வேண்டும் என தொழில் முனைவோர் வலியுறுத்தினர். சிறு குறு தொழில் வளர்ந்து தொழில் முனைவோரை, தொழிலாளர்களை வளர்த்து விட வேண்டும் என அனைவரும் பிராத்தனை செய்தனர்.

MUST READ