புதுதில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் இன்று ஜூலை 24 ஆம் தேதி மாலை கூடியது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சிகளின் தலைவா்களுடன் காவிரி நீர் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் கூறியதாவது, ஜூலை மாதத்திற்கு உள்ள நிலுவை பாக்கி தற்போதைய சூழ்நிலைக்கு இல்லை.
நிர்மலா சீதாராமனின் புதிய விளக்கம் : மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லையா?
உச்சநீதிமன்ற உத்தரவின் படி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
இது தொடர்பாக வரும் ஜூலை மாதம் 30 ஆம் தேதி காவேரி ஒழுங்காற்று குழு மீண்டும் கூட்டப்படுகிறது. அதில் முடிவெடுக்கப்படும் என காவேரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.