Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

-

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது சரியானது தான் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு கடந்த ஆகஸ்ட் 7- ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதால், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் (ஆகஸ்ட் 12) நிறைவடையும் நிலையில், பிற்பகல் 03.00 மணியளவில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, 3,000 பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக, விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களும் இரும்புப் பெட்டியில் வைத்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தகவல் கூறுகின்றன.

மாணவர்களிடையே சாதி மோதலை தவிர்க்க ஒருநபர் ஆணையம் அமைப்பு

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

MUST READ