spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜனநாயகத்தைக் காக்க மிகப்பெரிய போராட்டம்"- ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!

“ஜனநாயகத்தைக் காக்க மிகப்பெரிய போராட்டம்”- ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!

-

- Advertisement -

 

"ஜனநாயகத்தைக் காக்க மிகப்பெரிய போராட்டம்"- ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!

we-r-hiring

ஜனநாயகத்தைக் காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ஹண்டர்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நீலகிரி மாவட்டம், கூடலூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி புரிந்துக் கொள்ளவில்லை. ஒரே நாடு, ஒரே தலைவர் என தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் பிரதமர் மோடி. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

இந்தியாவில் பல மொழிகள் உள்ளன; இந்தியாவின் இயல்பை பிரதமர் புரிந்துக் கொள்ளவில்லை. ஜனநாயகத்தைக் காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். பன்முகத்தன்மை மற்றும் சமூகநீதியை அழித்து, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் புகுத்த நினைக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

MUST READ