டெங்கு பாதிப்பு கடந்த மூன்று வாரங்களாக அதிகரிப்பு நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கடந்த இரண்டு மூன்று வார காலமாக டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களில் நகராட்சி நிர்வாக துறை உடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்டத்தில் டெங்கு தொற்று ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி முதல் இதுவரை டெங்குவால் 15 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தனியார் மருத்துவமனையில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் நிலையங்கள் குட்டைகள் ஓடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் வீட்டில் அருகே நீர் தேங்காதவாறு பொதுமக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் உயிரிழப்புகளை தவிர்க்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் நகராட்சி துறை நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும். டெங்குவிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் 12264 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 3665 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 9367 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 1171 பேருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 7998 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 1278 பேருக்கும் டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்கள் டெங்கு பாதிப்பை ஆய்வு மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது ஜனநாயக சக்திகளுக்கும் சனாதன சக்திகளுக்கும் இடையிலான யுத்தம் – தொல் திருமாவளவன்