spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

MKStalin

we-r-hiring

மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!

தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “69-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசி விவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!

மேலும், இரவின் நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், ‘கருவறை’ ஆவணப் படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!

இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ