spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசேலத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் - சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்

சேலத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்

-

- Advertisement -

சேலத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் - சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்சேலத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளுடன் தீப ஒளி திருநாளை கொண்டாடிய தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்

கல்வியிலும், விளையாட்டு துறையிலும் தமிழ்நாட்டு மாணவ மாணவியர் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் பெருமிதம்

we-r-hiring

சேலம் மாநகர் காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பாலர் ஞான இல்லத்தில் மனம் நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த இல்லத்திற்கு இன்று சென்ற தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் , மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளுக்கு தீப ஒளி திருநாளையொட்டி இனிப்புகளை வழங்கினார். மேலும் மாற்று திறனாளி நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் உற்பத்தி செய்த பொருட்களை பார்வையிட்டு, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளையும் வழங்கி , மத்தாப்பை கொளுத்தி அவர்களுடன் இணைந்து தீப ஒளி திருநாளை கொண்டாடினார். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மத்தாப்பை சுழற்றி மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதனிடையே, சேலம் அருகே பனமரத்துபட்டி ஒன்றிய மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் 182 பேருக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த அவர், இந்தியாவிலேயே கல்விக்கும், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக மாணவ மாணவியர் கல்வியில் நாட்டிலேயே சிறந்தவர்களாக வர வேண்டும் என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

MUST READ