தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் பிரதமர் மோடி வருகையை கண்டித்தும், அவரது நிகழ்ச்சியை புறக்கணித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு வருகின்றனா்.
இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் எதிரான மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை இறக்குமதி செய்ய 04.05.2025 அன்று டெல்லியில் 500 கோடி ஒதுக்கீடு செய்து விட்டு, இயற்கை வேளாண்மைக்கு மாநாடு நடத்துவதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா். விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலையும், இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இரண்டு வருடம் போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறை நடத்தினர். விவசாய கடன் 1 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்படவில்லை.
மேலும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, அதனை கண்டு கொள்ளாதிருக்கும் ஒன்றிய நீர்வளத்துறை, இயற்கை விவசாயத்திற்கு மானியம் இல்லை, உரிய விலையும் இல்லை என்பதால், மோடிக்கும் ஒன்றிய அரசுக்கும் எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.



