
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பண்டிகைக் காலத்தையொட்டி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படவுள்ளது. அதன்படி, ஜனவரி 04, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும் (ரயில் எண் 06067), ஜனவரி 04, 11, 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கும் (ரயில் எண் 06068) சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
அதிகாலை 05.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், மதியம் 02.50 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில், நள்ளிரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
இந்த சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.