
டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்தது.
பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளி கட்டிடத்தை இடித்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜ் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் ஜெயக்குமார் எம்.பி., வி.சி.க.வின் ரவிக்குமார் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி எம்.பி., கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் எம்.பி. ஆகியோர் அடங்கிய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து, தமிழக வெள்ளப் பாதிப்புகளுக்கு தமிழக அரசு கோரிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரியது.
பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு எம்.பி., “தமிழக வெள்ள சேதம் குறித்து மத்திய உள்துறை அமித்ஷாவிடம் விரிவாக எடுத்துரைத்தோம். தமிழக பேரிடர் நிவாரணமாக ரூபாய் 37,907.19 கோடியை விரைவாகத் தர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரினோம். மத்தியக் குழு அறிக்கைத் தந்ததும் அதிகாரிகளிடம் ஆலோசித்து நிதி தருவதாகக் கூறினார்.
கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேரிடர் பாதிப்புக்கு ஏற்ப துறைகளுடன் ஆலோசித்து வரும் ஜனவரி 27- ஆம் தேதிக்குள் நிதியை விடுவிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளார். நிதித்துறை, உள்துறை, வேளாண்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து நிதி தருவதாக அமித்ஷா தெரிவித்தார். தமிழகத்தில் வெள்ளத்தால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதை தான் உணர்ந்ததாக அமித்ஷா தெரிவித்தார். மத்திய அரசு தமிழக அரசைப் புறக்கணிப்பதாகக் கூற முடியாது” என்றார்.