spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉரையைப் புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

உரையைப் புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

-

- Advertisement -

 

உரையைப் புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

we-r-hiring

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வருகை தந்து உரையாற்றினார்.

U19 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது!

எனினும், தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய உரையைப் படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் போதும், முடியும் போதும் தேசிய கீதம் பாதிக்கப்படவில்லை என்று பேரவையிலேயே குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளுநர் தனது உரையை முழுவதுமாகப் படிக்காமல் 2 நிமிடங்களிலேயே நிறைவுச் செய்தார். ‘வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம்’ எனக் கூறி தனது உரையை நிறைவுச் செய்தார். ஆளுநரின் உரையை சபாநாயகர் அப்பாவு படித்துக் கொண்டிருக்கும் நிலையில், சட்டப்பேரவையின் இருக்கையில் அமர்ந்துள்ள ஆளுநர், பார்வையிட்டு வருகிறார்.

முன்னதாக, சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆளுநருக்கு சபாநாயகர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.

U-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்க்

கூட்டத்தொடரில், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ