நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் ஜி எஸ் டி வரிக்குறைப்பு இன்று முதல் அமல் – மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சீர்திருத்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்க்கையில் பேருதவியாக அமைந்திருக்கும் மத்திய அரசின் ஜி எஸ் டி வரிக்குறைப்பு நடைமுறை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. உயிர்காக்கும் மருந்துகள், தனி நபர் மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு முழுமையான வரி விலக்கு, சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கல்வி சார்ந்த உபகரணங்களுக்கு வரிக்குறைப்பு நான்கு அடுக்குகளாக இருந்த வரிவிதிப்பு நடைமுறை இரண்டு அடுக்குகளாக மாற்றம் உள்ளிட்ட ஜி எஸ் டி வரிவிதிப்பில் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியது.
பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் தீபாவளிப் பரிசாக ஜி எஸ் டி வரி குறைப்பில் புதிய சீர்திருத்தங்களை அமல்படுத்தியிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் – முதல்வர்
