spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎச்.ராஜா பத்ம பூஷனுக்குத் தகுதியானவர் - பிரதமருக்கு வலியுறுத்தும் காயத்ரி

எச்.ராஜா பத்ம பூஷனுக்குத் தகுதியானவர் – பிரதமருக்கு வலியுறுத்தும் காயத்ரி

-

- Advertisement -

h

தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்திருக்கிறார் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா. தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் எச்.ராஜாவின் பெயரும் அடிபடும். புதிய ஜனாதிபதி தேர்விலும் ஒவ்வொருமுறையும் எச்.ராஜாவின் பெயர் அடிபடுகிறது.

we-r-hiring

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கடந்த முறை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்த முறையும் அவர்தான் அந்த தொகுதியில் நிறக்கப்போகிறார் என்ற பேச்சு இருந்த நிலையில், திடீரென்று அவர் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

g

இது குறித்து தமிழக பாஜகவில் இருந்து வெளியேறிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம், ‘’எச்.ராஜா அண்ணா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் எச்.ராஜா அண்ணா, தேசத்துக்கும் கட்சிக்கும் சேவை செய்யும் விருதுக்கு தகுதியானவர்.

குறிப்பாக அவர் பல ஆண்டுகளாக இந்துக்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர் பத்மஸ்ரீ அல்லது பத்ம பூஷனுக்குத் தகுதியானவர். எச்.ராஜா அண்ணாவை கௌரவிக்க மரியாதைக்குரிய பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார். அவர் மேலும், ’’எச். ராஜா அண்ணா, உங்கள் தேசத்திற்கான சேவை தொடர எனது வாழ்த்துக்கள்’’என்று கூறியிருக்கிறார்.

MUST READ