spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நூல் வாங்க கைத்தறி துறை டெண்டர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நூல் வாங்க கைத்தறி துறை டெண்டர்

-

- Advertisement -

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு 6600 மெட்ரிக் டன் நூல் வாங்க கைத்தறி துறை டெண்டர் கோரியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நூல் வாங்க கைத்தறி துறை டெண்டர்தமிழகம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில், நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுவதை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்குத் தேவைப்படும் வேட்டி சேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்பணமாக வழங்கிட  100 கோடி ரூபாய் அனுமதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வேட்டி சேலைக்கான நூல் வாங்க கைத்தறி துறை டெண்டர் கோரியுள்ளது.

இதன்படி, விசைத்தறி சேலைகளுக்காக 3050 மெட்ரிக் டன் 60s பருத்தி கலர் கோன் நூல்,  விசைத்தறி வேட்டிகளுக்கு 3597 மெட்ரிக் டன் பாலிகாட் கிரே பாவு நூல் வாங்க கைத்தறிதுறை டெண்டர் கோரியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதே போல ஏறத்தாழ 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படும்.

MUST READ