Homeசெய்திகள்தமிழ்நாடுபோலி ரூ.500 நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி? – மத்திய அரசு அறிவுறுத்தல்

போலி ரூ.500 நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி? – மத்திய அரசு அறிவுறுத்தல்

-

- Advertisement -

நிதியமைச்சகம் போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் புழக்கத்தில் உள்ள, போலி ரூ.500 நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.போலி ரூ.500 நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி? – மத்திய அரசு அறிவுறுத்தல்அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளில் ரூ.500 நோட்டு முதன்மையாக உள்ளது. இந்நிலையில் நிதியமைச்சகம் போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், போலி ரூ.500 நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதில், தரம், அச்சில் அசல் ரூ.500 நோட்டிற்கு கொஞ்சமும் குறையாமல் உள்ள கள்ள நோட்டில் ஒரு எழுத்து மாறி இருக்கும். கள்ளநோட்டில் RESERVE BANK OF INDIA என்ற வார்த்தையில் E-என்பதற்கு பதில் A இருக்கும் என  மத்திய அரசு விளக்கியுள்ளது. இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்தில் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது . வங்கிகள், செபி, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்க மத்தியஅரசு அறிவுறித்தியுள்ளது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் யார் ? என்ற குழப்பத்தில் தலைமை தேர்தல் ஆணையம் உள்ளதா?

MUST READ