Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டம் ஒழுங்கு ரவுடிகள் வசம் - இபிஎஸ் குற்றச்சாட்டு..

சட்டம் ஒழுங்கு ரவுடிகள் வசம் – இபிஎஸ் குற்றச்சாட்டு..

-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தனியார் ரவுடிகளின் வசம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை என அவரது ஆதரவாளார்கள் , அமைச்சர் கே.என்.நேருவின் காருக்கு கருப்புக்கொடி காட்டினர். இதன் தொடர்ச்சியாக திருச்சி சிவா மற்றும் கார் மீது நேருவின் ஆதரவாளார்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக திருச்சி சிவா தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் கே.என்.நேரு தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு ரவுடிகள் வசம் - இபிஎஸ் குற்றச்சாட்டு..

அதன்பேரில் அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டிய 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி நீதிமன்றக் காவல் நிலையத்தில் வைத்திருந்த போது அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக எம்.பி., திருச்சி சிவா ஆகியோரது ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மோதலை தடுக்க முயன்ற பெண் காவலர் சாந்திக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் , அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

திருச்சி சிவா - கே.என்.நேரு
சட்டம் ஒழுங்கு ரவுடிகள் வசம் – இபிஎஸ் குற்றச்சாட்டு..

மேலும், இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

MUST READ