மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் தாக்கல் செய்த மனுவிற்கு மதுரை ஆதீனம் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும் இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்தனர் தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் என காவல்துறையில் சாா்பில் புகா்ா அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், நேரில் ஆஜராக கூறியுள்ளது. விசாரணைக்கு ஆதீனம் ஒத்துழைக்கவில்லை என்றும் ஆதீனத்திற்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி மதுரை ஆதீனத்திற்கு எதிராக காவல்துறை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதமோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவுக்கு மதுரை ஆதீனம் பதில் தர சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை தாக்கல் செய்த மனு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. ஜூலை 30-க்குள் மதுரை ஆதீனம் பதில் தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். வழக்கில் மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை…