உடல்நலக்குறைவால் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாசருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 14- ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருமான நாசர் பித்தப்பையில் கல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அறுவைச் சிகிச்சை மூலம் பித்தப்பையில் இருந்த கல் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, அவருக்கு குடல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!
தகவலறிந்த தி.மு.க. நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நாசரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.