சாணார்பட்டி அருகே உள்ள அரசு மதுபானக்கடை அருகே உள்ள பார் இல் காவல் துறையினர் பணத்தை எடுத்துச் செல்லும் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே செங்குறிச்சி என்னும் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. மதுபான கடைக்கு அருகே தனியார்க்கு சொந்தமான பார் ஒன்று உள்ளது. இந்தப் பாரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாரான முத்துக்குமார் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் பாரில் திடீரென சோதனை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் பாரில் கல்லாவில் இருந்த (அட்டை பாக்ஸ்) 15 ஆயிரம் ரூபாய் மற்றும் பாரில் வேலை செய்து வந்த நபரின் பாக்கெட்டில் வைத்து இருந்த பணத்தையும் காவல் துறையினர் எடுத்துச் சென்று வரும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காவல் துறையினர் பாரில் பணம் பறிக்கும் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.