Homeசெய்திகள்தமிழ்நாடு"கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்"- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

-

 

Anbumani Ramadoss

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றனர்.

“தேசிய அளவில் இந்தியா கூட்டணி; தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி”- பார்வர்ட் பிளாக் கட்சி அறிவிப்பு!

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்!

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மகளிர் நாள் நாளை மறுநாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வெளியுலகம் அறியாத பிஞ்சு உள்ளத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

சிறுமியை சீரழித்தவர்கள் அவரது வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் தான். சிறுமி காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் இரு நாட்களுக்கு முன்பாகவே புகார் அளித்துள்ளனர். புகார் கிடைத்த உடனே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியை பத்திரமாக மீட்டிருக்க முடியும். ஆனால், சிறுமியை தேடிக் கண்டுபிடிக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் அச்சிறுமி சிதைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம். அந்த வகையில் இந்தக் கொடுமைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதுச்சேரி மாநிலம், முழுவதும் கஞ்சா பயன்பாடு தலைவிரித்தாடுகிறது. சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் மது போதைக்கும், 19 வயது இளைஞர் கஞ்சா போதைக்கும் அடிமையானவர்கள் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. புதுச்சேரியில் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களுக்கும் கஞ்சா தான் முதன்மைக் காரணமாக உள்ளது. கஞ்சா நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய வகையிலும் இந்தக் குற்றத்திற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

9 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களுக்கும் சட்டப்படி தூக்குத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை பெற்றுத்தர புதுச்சேரி மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குற்றத்தைத் தடுக்கத் தவறிய முத்தியால்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ