மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர் ச.சீ. இராசகோபாலன். அவரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பு என முதல்வர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆசிரியராகத் தமது கல்விப் பணியைத் தொடங்கிய முனைவர் ச.சீ. இராசகோபாலன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர். அன்னாரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பாகும்” என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.



