Homeசெய்திகள்தமிழ்நாடு"சாந்தனை இலங்கை அனுப்ப ஒரு வாரத்தில் அனுமதி"- உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

“சாந்தனை இலங்கை அனுப்ப ஒரு வாரத்தில் அனுமதி”- உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

-

- Advertisement -

 

சாந்தனை இலங்கை அனுப்ப ஒரு வாரத்தில் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கல்வி ஒன்றே அழியாத சொத்து என்பதற்கு ஸ்ரீபதி உதாரணம் – அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், தன்னை இலங்கைக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப்.13) விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சாந்தன் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பியதாகக் கூறப்படும் ஆவணம் மத்திய அரசுக்கு வந்து சேரவில்லை. இலங்கை தூதரகம் அனுப்பிய பயண ஆவணம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாந்தன் இலங்கைக்கு திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் மத்திய அரசு ஆணை பிறப்பிக்கும்” என்று உறுதியளித்துள்ளார்.

ஆளுநர் வெளிநடப்புக்கு தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் காரணம் – ஜி.கே.வாசன்

மத்திய அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

MUST READ