ஜூன் 2ம் தேதி தொடங்கப்படவுள்ள புதிய கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நிரப்ப காலியாக உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 02.06.2025 முதல் பள்ளி மேலாண்மை குழு (SMC) முற்றிலும் தற்காலிக அடிப்படையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் எவ்வித புகார்களும் இடமளிக்காமல் நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்கள், மகப்பேறு விடுப்பில் உள்ள ஆசிரியர் பணியிடம், 6 மாதத்திற்கு மேல் விடுப்பில் உள்ள பணியிடம் ஆகியவற்றிற்கு பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக ஆசிரியர்களை நிரப்ப வேண்டும்.
பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் மாற்றுப்பணியில் சென்றுள்ள ஆசிரியர்களின் பணியிடத்திற்கும் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் நிரப்பலாம்.
பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் B.Ed, தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி நியமனம் மேற்கொள்ளப்படவேண்டும்.
முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு பாடம் சார்ந்து தகுதி வாய்ந்த முதுகலை பட்டம் B.Ed. தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாம். என பள்ளி மேலாண்மை குழு (SMC) வின் தீர்மானத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இதில் எவ்வித புகாருக்கு இடமளிக்கா வண்ணம் பணிநியமனம் மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்…முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம்!