Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை, நாளை மறுநாள் சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

நாளை, நாளை மறுநாள் சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

-

- Advertisement -

 

"மதுரை-கோவை, மதுரை- விழுப்புரம் ரயில்களின் நேரம் மாற்றம்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Video Crop Image

நாளை (ஜன.28), நாளை மறுநாள் (ஜன.29) கன்னியாகுமரி- சென்னை எழும்பூர், கோவை- சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

we-r-hiring

தமிழில் பேசிய மாணவன்….கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை!

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தைப்பூசம், குடியரசுத் தினம் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, நாளை (ஜன.28) இரவு 08.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், வரும் ஜனவரி 29- ஆம் தேதி பகல் 01.00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அதேபோல், நாளை (ஜன.28) இரவு 11.30 மணிக்கு கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில், ஜனவரி 29- ஆம் தேதி மதியம் 01.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

பிரதமர் மோடியின் படம் இல்லாமல் ‘கேலோ இந்தியா’ விளம்பரப் பதாகைகள்- வானதி சீனிவாசன் கண்டனம்

இந்த சிறப்பு ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ