மருத்துவமனையில் இருந்தவாறே காணொலி வாயிலாக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வரும் நிலையில், சிகிச்சையில் இருந்தவாறே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்ற மக்களுடன் காணொலியல் முதல்வர் உரையாடினார். லுங்கி அணிந்து கொண்டு நாற்காலியில் இயல்பாக அமர்ந்தபடி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் பணிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தாா்.
கன்னியாகுமாரி, கோவை, காஞ்சிபுரம் மாட்ட ஆட்சியர்களுடன் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினாா். பின்னர் மக்களின் கோரிக்கை மனுக்களை கேட்டறிந்து அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டாா். மேலும் மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்களையும் கேட்டறிந்தாா். மகளிர் உரிமைத் தொகை கோரி அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. அதிகமாக மனுக்கள் வரும் பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

மூன்று நாள்களாக சிகிச்சையில் உள்ள நிலையில், முதல்முறையாக முதலமைச்சரின் புகைப்படம் வெளியாகிறது.