Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர்கள், குடியரசு தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது - நீதிபதி செல்லமேஸ்வர்!

ஆளுநர்கள், குடியரசு தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது – நீதிபதி செல்லமேஸ்வர்!

-

- Advertisement -

ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்.ஆளுநர்கள், குடியரசு தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது - நீதிபதி செல்லமேஸ்வர்!

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும்,மாநிலங்களவை உறுபினருமான என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் நினைவு  அறக்கட்டளையின் சார்பில், நீதி மற்றும் சமத்துவத்திற்கான நான்காம் ஆண்டு, தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகள் பயணம் என்ற தலைப்பில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி  ஜஸ்டி செல்லமேஸ்வர் பேசிய பின்பு நடைபெற்ற கலந்துரையாடலின்போது சென்னை உயர்நீதிமன்ற  ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம்,

ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீதும் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து துணை குடியரசுத் தலைவர், எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி செல்லமேஸ்வர், நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் இயற்றும் சட்டங்களை சட்டவிரோதமானது என அறிவிக்க உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் உள்ள நிலையில், ஆளுநர்கள், குடியரசு தலைவர் போன்ற பொது ஊழியர்கள் தங்கள் கடமையை செய்யும்படி உத்தரவிட அதிகாரம் இல்லை என்று நம்ப முடியாது என பதில் அளித்தார்.

புதிய மீன் அங்காடியை அரசு திறந்து வைக்க வேண்டும் – எம்எல்ஏ சிவா வலியுறுத்தல்

MUST READ