spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிடீர் வேகத்தடையால் பறிபோன இளைஞரின் உயிர்

திடீர் வேகத்தடையால் பறிபோன இளைஞரின் உயிர்

-

- Advertisement -

திடீர் வேகத்தடையால் பறிபோன இளைஞரின் உயிர்

கோவை கொடிசியா அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடையால் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய நிகழ்வில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இளைஞரின் உயிரைப்பறித்த வேகத்தடை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த சந்திரகாந்த் (26). சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகின்றார். இவர் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். கொடிசியா அருகே உள்ள தனியார் (கீதாஞ்சலி மெட்ரிக்) பள்ளி அருகே இரு சக்கர வாகனம் வந்த பொழுது அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்த சந்திரகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

we-r-hiring

இரண்டு நாட்களுக்கு முன்பு கீதாஞ்சலி பள்ளி நிர்வாகம் சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடை அமைக்கப்பட்டதற்கான குறியீடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் , இரவு நேரத்தில் வேகத தடை இருப்பது தெரியாமல் வந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. இரவு விபத்து ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அவசர அவசரமாக வேகத்தடை இருப்பதற்கான குறியீடுகளை பெயின்ட் மூலம் அடித்தனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Death

வேகத்தடை அமைத்தது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, தனியார் பள்ளி நிர்வாகம் வாய்மொழியாக கூட தங்களிடம் அனுமதி பெறவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மாநகராட்சி தரப்பிலும் புகார் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடையை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

MUST READ