
தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாவீரனில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது விஜய் சேதுபதி…. அப்போ அயலான் பட ஏலியனுக்கு???
முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரி, வரும் டிசம்பர் 15- ஆம் தேதி அன்று மதுரை மாவட்டம், மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். தற்போது, முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும், மேலூரில் உள்ள நிலங்கள் ஒருபோகம் விவசாயம் செய்ய தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படங்கள்!
விவசாயிகளின் அத்தியாவசிய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


