spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைத் தொகை: துணை முதல்வர் வெளியிட்ட புதிய அப்டேட்!

மகளிர் உரிமைத் தொகை: துணை முதல்வர் வெளியிட்ட புதிய அப்டேட்!

-

- Advertisement -

மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று துணை முதல்வர் தெரிவித்தார்.மகளிர் உரிமைத் தொகை: துணை முதல்வர் வெளியிட்ட புதிய அப்டேட்!சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3,134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்குவதை துவக்கி வைக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த 1,401 சுய உதவிக் குழுக்களுக்கு 123.65 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் இணைப்புகளையும், 35 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் மற்றும் மொத்தம் 59.00 லட்சம் ரூபாய்க்கான விருது காசோலைகளை வழங்கி, புதிதாக வடிவமைக்கப்பட்ட ”மதி இலட்சினையை” (Logo) வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர், சிறப்பாக செயல்படுகிற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வருடம் தோறும் மணிமேகலை விருதுகளை வழங்கி வருகிறோம். இதன்படி இன்றைய தினம் இந்த விருதுகளை வழங்கினோம்.  சென்ற ஆண்டிலிருந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகளை இன்றைய தினம் வழங்கினோம்.

we-r-hiring

சுமார் 3000 கோடி அளவிற்கு வங்கிக் கடன் இணைப்புகளையும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கி உள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பின்படி மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முதல் கட்ட பணிகளை தொடங்கி விட்டோம். தேதி தொடர்பான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்படும். சென்ற முறை எப்படி சரியாக முகாம் நடைபெற்றது அதேபோன்று இந்த முறையும் சரியான முறையில் முகாம் நடைபெற்று விடுபட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

அமித்ஷாவின் பேராசையால் உடையும் என்.டி.ஏ கூட்டணி? உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

MUST READ