எந்தவித தடயமின்றி திருவள்ளுர் சுற்றுவட்டார பகுதியில் பூட்டிருக்கும் வீடுகளில் பட்டப் பகலில் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி விட்டு தப்பிய பிரபல கொள்ளையனை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொடர் 6 திருட்டு சம்பவங்களும் பூந்தமல்லி ,நசராத்பேட்டை காவல் நிலைய உள்பட்ட தலா ஒரு திருட்டு சம்பவங்களும் என கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.
பூட்டியிருக்கும் வீடுகளில் பட்டப் பகலில் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். இத்தகைய கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் மர்ம கொள்ளையர்களை பிடிக்க செவ்வாப்பேட்டை போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் ஆய்வுகள் செய்தும் புலனாய்வு விசாரணை மேற்கொண்டனர். எந்தவித தடயமின்றி விட்டு தப்பிய கொள்ளையனை பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டிருந்தது. குற்றங்கள் நடைபெற்ற சம்பவங்கள் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிசிடி காட்சிகளை ஆய்வு செய்ய மேற்கொண்டனர்.
அப்போது வேப்பம்பட்டு பஜார் பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி பதிவை ஆய்வு செய்த போலீசார் மர்ம நபர் ஒருவர் வந்து செல்வது பதிவாகி இருந்ததை கொண்டு அவர் ஏற்கனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபரா என்ற கோணத்தில் அனைத்து காவல் நிலையத்திற்கும் அவன் உருவத்தை அனுப்பி அடையாளம் காணும் முயற்சிக்கில் ஈடுபட்டனர். அத்தகைய நபர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் 37 வயதுடைய மொய்தீன் என சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
அவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்து வருவதும் தெரியவந்தது. அந்த நபர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மீது திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, வந்தவாசி, தூசி போன்ற காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் மேற்கொண்டு வந்ததும் அத்தகைய காவல் நிலையம் மீது அவர் மீது வழக்குகள் நிலுவில் இருந்து வருவதால் திருவண்ணாமலை சேத்துப்பட்டு இருந்து அவர் குடும்பத்துடன் தலை மறைவாகியுள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் திருவள்ளூர் அருகே பதுங்கி கொள்ளை சம்பவங்களை அரங்கேற்று வருவது போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. அத்தகைய நபரை பிடிக்க செவ்வாபேட்டை தனிப்படை போலீசார் தீவிரம் காட்டினார்
திருட்டு சம்பவம் நடைபெற்ற வேப்பம்பட்டு பஜார் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது அந்த நபர் உருவம் அடையாளம் தெரிந்ததால் வேப்பம்பட்டு முதல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதி வரை சுமார் 30 சி.சி.டிவி கேமராக்கள் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது நந்தம்பாக்கம் வீட்டில் இருந்த அவரை போலீசார் கைது செய்து செவ்வாபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, வந்தவாசி, தூசி காவல் காவல் நிலையங்கள் திருட்டு வழக்குகள் நிலவியில் உள்ளதால் அங்கிருந்து தலைமறைவாகி குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்திற்கு குடும்பத்துடன் முதலில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளான்.
நந்தம்பாக்கத்தில் தங்கி விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலையம், மாங்காடு காவல் நிலையம், பூந்தமல்லி நசரத்பேட்டை காவல் நிலையம் என அவர் மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் தனியாக ஈடுபட்டதும், எந்தவித தடயும் போலீசாருக்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காக ரயிலில் மூலமாக வந்து பூட்டியிருக்கும் வீடுகளை வேவு பார்த்து கொள்ளை அரங்கேற்று சென்றதாகவும்.
பின்னர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நகைகளை சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் தங்க நகையை விலைக்கு விற்று அத்தகைய பணத்தை பெற்று நந்தம்பாக்கம் பகுதியிலே வீட்டுமனை வாங்கி அதில் 20 லட்சம் மதிப்பில் வீடு கட்டி இருப்பதும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் பணத்தை வைத்து தனது இரண்டு மகள்களை பத்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு என இருவரை குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயிலில் வந்து திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் பட்டப் பகலில் பூட்டி இருக்கும் வீட்டை வேவு பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையானை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் கைது செய்துள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது .