செல்லப்பிராணியான நாய்களுக்கென தனி விமான சேவையை அறிமுகப்படுத்தி இருந்த பார்க் ஏர் நிறுவனம் கூடுதலாக 5 இடங்களுக்கு தனது சேவையை விரிவு படுத்தி உள்ளது.
நாய்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி பலரும் வளர்த்தாலும் அவற்றிற்காக கணக்குப் பார்க்காமல் செலவு செய்யும் செல்வந்தர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் வளர்ப்பு நாய்களை அவற்றின் உரிமையாளர்கள் சொகுசாக விமானத்தில் அழைத்துச் செல்வதற்காகவே பார்க் ஏர் என்று நிறுவனம் பிரத்யேக விமான சேவையை தொடங்கியது.
கடந்த மே 23 ஆம் தேதி தொடங்கப்பட்ட சேவையில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் லண்டன் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் தற்போது பாரிஸ், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, பீனிக்ஸ், மியாமி ஆகிய இடங்களுக்கும் விமான சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளன.
ஐஸ்கிரீமில் மனித விரல்… ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்… (apcnewstamil.com)
ஒரு விமானத்திற்கு 10 பேர் மட்டுமே நாய்களுடன் அனுமதிக்கப்படுவர். இந்த விமானத்தில் செல்லப் பிராணியுடன் பயணம் செய்வதற்கான டிக்கெட்டின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.