ஸ்பெயினில் விசித்திர வழக்கு ரூ.1.75 கோடி ஜீவனாம்சம்
ஸ்பெயின் நாட்டில் இவானா என்ற பெண் தனது கணவர் வீட்டு வேலை செய்வதற்காகவே திருமணம் செய்து கொண்டார் என்று கூறி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய சம்பவம் பலரை கவனிக்க வைத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவானா என்ற பெண் தனது கணவர், தன்னை வீட்டு வேலை செய்வதற்காகவே திருமணம் செய்து கொண்டார். எனவே தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 25 ஆண்டுகளாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்த இவானாவுக்கு அவரது கணவர் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.