போடிநாயக்கனூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏற்பட்ட கடன் காரணமாக மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை.

இளைஞரின் பெற்றோரின் புகார் மனுவை தொடர்ந்து போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் இறந்தவரது உடலை கைப்பற்றி போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திருமலாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன் மஞ்சுளா தம்பதியினர், இவரது மகன் பிரபாகரன்(33). இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளனர்.
இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததாக வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்த இவர் ரம்மி விளையாட்டில் ஈடுபாடு அதிகம் கொண்டதன் காரணமாக அதற்கு அடிமையாகி கடன் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மியில் விளையாடுவதற்கு தனக்கு தெரிந்தவர்களிடம் சில லட்சங்கள் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதாகவும் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரபாகரன் தனது குடும்பத்தினர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபாகரன் பெற்றோர் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட பிரபாகரன் உடலை கைப்பற்றி போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உடலை உரியோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’…. ‘மன்னிப்பு’ வீடியோ பாடல் வெளியீடு!