spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇரட்டை தலைமை காலாவதியாகவில்லை- ஓபிஎஸ் தரப்பு

இரட்டை தலைமை காலாவதியாகவில்லை- ஓபிஎஸ் தரப்பு

-

- Advertisement -

இரட்டை தலைமை காலாவதியாகவில்லை- ஓபிஎஸ் தரப்பு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படுகின்றன. ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ம் ஆண்டு வரை நீடிக்கிறது, எந்த வாய்ப்பும் அளிக்காமல், விளக்கம் கேட்காமல், காரணம் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இது நியாமற்றது என ஓ.பி.எஸ். தரப்பு வாதத்தை எடுத்துரைத்தது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர் என்றும், ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டிய ஓபிஎஸ் தரப்பு, ஜூன் 23 பொதுக்குழுவில் தீர்மானங்கள் முன் வைக்கப்படாத நிலையில் இரட்டை தலைமை காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளது.

we-r-hiring

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக உச்ச நீதிமன்றமும் கூறவில்லை, ஆகவே
தகுதி நீக்கம் செய்து விட்டு பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி ஈபிஎஸ் தரப்பினர் முடிவெடுத்துள்ளனர் என்றும், இந்த முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது எனவும் உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும், அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது எனக் கூறிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள் என்றார். பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என சுட்டிக்காட்டிய அவர்கள், பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனக் கூறினர்.

MUST READ