- Advertisement -
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர் என்று கூறியுள்ளாா்.
சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இந்தியாவில் முதல்முதலாக சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் வைத்தவர் கலைஞர் எனவும் சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் என்ற அடிப்படையில் நமது முன்னெடுப்புகள் உள்ளன எனவும் பேசியுள்ளார்.