spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபோஸ்ட்மேன் மாநாட்டிற்கு தடை! ராஜ்பவனுக்கு தந்தி அடிச்சாச்சு!

போஸ்ட்மேன் மாநாட்டிற்கு தடை! ராஜ்பவனுக்கு தந்தி அடிச்சாச்சு!

-

- Advertisement -

உச்சநீதிமன்றம் வரை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்த பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை தமிழக அரசு பறித்துள்ளதாகவும், ஆனால் அவர் துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் தான் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாகவும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது தொடர்பாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் 3 நாட்களுக்கு துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் என்ன உள்ளது? அவர்தானே பல்கலைக்கழக வேந்தர் என்றும் பலரும அறியாமையில் கேட்கலாம். அவர் வேந்தர் கிடையாது என்றுதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது வேந்தர் யார்? என்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வேந்தராக ஒருவர் இருக்கும்போது, வேந்தராக இல்லாத ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் விதமாக 3 மாநாட்டி கூட்டி குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை வேறு அழைத்துள்ளார். ஜெகதீப் தன்கர், சமீப நாட்களாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தும் பேசி வருகிறார். வேந்தர் பதவி கிடையாது என்று சொல்லியபோதும், நான்தான் வேந்தர் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பையும், அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்காமல் அடாவடித் தனமாக அத்துமீறுகிற வேலையை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு முன்மாதிரி பொறுப்பில் உள்ளவர் சர்வசாதாரணமாக சட்டத்தை மீறுவதை இயல்பானதை போன்று காட்ட முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டப்படி தற்போது நீங்கள் வேந்தர் கிடையாது. நீங்கள் எப்படி துணை வேந்தர் மாநாடு நடத்துகிறீர்கள்?. அதற்கு என்னையும் கூப்பிடுகிறீர்கள். இந்த மாநாட்டை நடத்த முதலமைச்சருக்கு தான் அதிகாரம் உள்ளது. அவர்கள் கூப்பிட்டால் வேண்டாம் நீங்கள் போகலாம். அதனால் ஆர்.என்.ரவி மாநாட்டை நடத்த எப்படி உரிமை உள்ளது?. அப்போது இவர்கள் எல்லாம் உச்சநீதிமன்றம்  கொடுத்த தீர்ப்பை மதிக்க மாட்டார்கள். தீர்ப்பின் மீது உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால் தீர்ப்பின்படி தானே செயல்பட வேண்டும். தற்போது வேந்தர் பதவியில் இருந்து உங்களை இறக்கிவிட்ட நிலையில், இல்லை இல்லை நான் தான் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவேன் என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் இதுபோன்ற மாநாடுகளை நடத்துகிற போதே பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை, இந்துத்துவா அரசியலை புகுத்தியுள்ளீர்கள். மாநில அரசுக்கு எதிராக நிறைய கருத்துக்களை விதைத்தீர்கள். அப்போதே அது கண்டனத்திற்குரியது. தற்போது நீங்கள் வேந்தரே கிடையாது. இருந்தாலும் நான் ஊட்டியில் மாநாடு நடத்துகிறேன் என்று சொல்வது, இதற்கு குடியரசு துணை தலைவர் நான் வருகிறேன் என்று சொல்வதும் எப்படி ஏற்கத்தக்க விஷயமாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் சிந்தனையில் இருந்து வந்தவர்கள் அனைவரும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதிப்பதே கிடையாது. அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இவர்கள் மொழி வழி மாநிலங்களை ஏற்பது கிடையாது. தேர்தல் என்கிற அமைப்பை இவர்கள் நம்புவது கிடையாது. அதை இவர்கள் சிஸ்டத்திற்கு ஏற்றாற் போல் மாற்றுவது. அனைத்து முறைகேடான விஷயங்களையும் இவர்கள் சாதாரணமாக்குகிறார்கள். இப்போது மக்கள் பார்ப்பார்கள் அல்லவா? ஆளுநருக்கான வேந்தர் பதவி போய்விட்டது. ஆனால் அவர் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார் என்று. இந்த சமயத்தில் முதலமைச்சர் சொல்லியுள்ள விமர்சனம் முக்கியமானதாகும். ஆளுநர் என்றால் தபால்காரர். எனக்கும்  மத்திய அரசுக்கும் நீங்கள் ஒரு போஸ்ட் மேன். கருத்து சொல்கிற அதிகாரம், உரிமை எதுவும் உங்களுக்கு கிடையாது. அப்போது நீங்கள் மாநாடு நடத்தலாமா? இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆர்.என்.ரவியை நீக்க சொல்லியுள்ளார்கள். அதுமட்டுமின்றி இந்த தீர்ப்பு வந்ததற்கு பின்னால் ஆர்.என்.ரவி போய்விடுவார் என்று சொன்னார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபோது ஆளுநர் மசோதாவை உச்சநீதிமன்றமே நிறைவேற்றி விட்டது. இனிமே வேந்தர் முதலமைச்சர் தான் என்று வந்தபோது, ஆளுநர் இருந்ததே ரப்பர் ஸ்டாம்ப் வைக்கத்தான். தற்போது அந்த வேளையும் இல்லை. ஏற்கனவே அவரது பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனால் வேறு மாநிலத்திற்கு அனுப்பி விடுவார்கள் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அதற்கு பிறகும் அவர் போகிறது போல் தெரியவில்லை.

ராஜ்பவனுக்கு ஏற்கனவே தந்தி அடித்தாகிவிட்டது. உங்களுக்கான அனைத்து வேலைகளையும், உரிமைகளையும் இழந்து நிற்கிறீர்கள். நீங்கள் செய்த அடாவடி தனங்களுக்கு பரிசாக அது அமைந்துவிட்டது என்று ஏற்கனவே தந்தி அடித்தாகி விட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் அடித்ததாக நினைத்தாலும் சரி, உச்சநீதிமன்றம் சட்ட ரீதியாக அடித்ததாக நினைத்தாலும் சரி. ராஜ்பவனுக்கே தந்தி அடித்தாகி விட்டது. அதற்கு பிறகும் இவர் ஒன்றுமே நடக்காதது போல ஊட்டியில் போய் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துகிறோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா? அப்போது தொடர்ச்சியாக ஆர்.என்.ரவி என்ன வேண்டும் என்றாலும் செய்வாரா? தற்போது மாநாடு நடைபெறுகிற போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டிப்பாக எதிர்வினை ஆற்றும்.  குடியரசுத் துணை தலைவர் வருகிறபோது தமிழ்நாடு வரவேற்கும். ஆனால் நீங்கள் வரவற்கும் மனநிலையில் வைக்கவில்லை. மாநில உரிமைகளுக்கு எதிராகவும், மாநில அரசை முடக்கவும்தான் நீங்கள் செயல் படுகிறீர்கள். அப்படி இருக்கும்போது எப்படி மாநில அரசு உங்களை வரவேற்க முடியும். உங்களுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் செய்யத்தான் முடியும்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்?

நன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் மாநில அரசை சீர்குலைக்கும் விதமாக ஊட்டியில் மாநாடு நடத்துகிறீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? மாநாட்டிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதை வைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்ல வேண்டும். எங்கள் மக்களுக்கான எந்த உரிமையையும் தர மாட்டோம் என்று சொன்ன ஆர்.என்.ரவியை, அதற்கான மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று சொன்ன ஆர்.என்.ரவியை உச்சநீதிமன்றத்திற்கு சென்று சட்ட ரீதியாக அவரை உட்காருங்கள் என்று சொல்லியுள்ளோம். திருப்பியும் நாங்கள் மாநாடு நடத்துவோம் என்றால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் வழக்கு போட்டுக்கொள்ளுங்கள் நான் சட்டத்தை மதிக்க மாட்டேன். என்ன வேண்டும் என்றாலும் செய்வேன். என் பணியை தொடரும் என்று ஆர்.என். ரவி சொன்னால் தமிழ்நாடு அவருக்கு எதிராக இருப்பது தானே எதார்த்தம். மக்களுக்கு எதுவும் நல்லது நடந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்துகொண்டு, எதையாவது பிரச்சினையை கிளப்பி கொண்டிருப்பதை தவிர்த்து இவர்களுக்கு எந்த அரசியலும் கிடையாது.  நாக்பூரின் அசைன்மெண்ட் படி ஆர்.என்.ரவி குட்டையை குழப்பிக்கொண்டிருக்கிறார். இதற்கு தன்கர் போன்றவர்கள் உதவி செய்கிறார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு பெரிய நெட்வொர்க் பாருங்கள். இவர்களுக்கு தமிழ்நாடு, தமிழர்களே பாடம் கற்பிப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ