தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்பி முன்னெடுப்பில் நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார். பஹல்காம் தாக்குதல் எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது ஒன்றிய அரசு இதை திசை திருப்பக் கூடாது என கனிமொழி எம்பி பேட்டியளித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தொழில் முனைவராக மாற விரும்பும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் களம் என்ற முன்னெடுப்பை திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம் பி எடுத்துள்ளார். இதன் இறுதி கட்ட நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக இரண்டு லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக துணை பொது செயலாளரும் பாராளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த ஆர்த்தி, தணேஷ் கனகராஜ் ,தீப்தி கேஷ்கரோனா, ஆகிய மூன்று பேருக்கு முதல்கட்டமாக 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை காண காசோலைகளை வழங்கி தொழில் நிறுவனம் நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கருணாநிதி எம் பி, புத்தொழில் களம் மூலமாக பல இளைஞர்கள் தொழில் முனைவர் தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யக்கூடிய முன்னெடுப்பை செய்துள்ளோம். மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் கட்டமாக 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவர்கள் ஏறத்தாழ புது தொழில் களத்திற்கு 400 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் சிலரை மறுபடியும் அழைத்துள்ளோம். அவர்கள் அரசு கொண்டு வர கூடிய திட்டங்கள் வழியாகவும் வங்கிகள் வழியாக உதவி செய்வதற்வதற்கு உறுதுணையாக இருப்பதற்காக அதன் மூலமாக அவர்கள் தொழிலை தொடங்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தவர்.
மேலும் பஹல்காம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எல்லோரையும் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாக்கியது. மிகவும், சோகமான நிகழ்வினை அரசியல் ஆக்கும் சூழலை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசு இதை வேறு திசைக்கு திருப்பக்கூடிய அபாய சூழலை உருவாக்கி வருகிறார்கள். ஒன்றிய அரசிடம் உள்ள தோல்விகளை ஏற்றுக்கொண்டு அதனை சரி செய்ய வேண்டும் அதை சரி செய்யாமல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.
தாக்குதல் நடைபெறும் போது அதனை அரசியல் ஆக்கி அதன் மூலமாக ஆதாயம் அடையும் சூழ்நிலைகளை உருவாக்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பங்கமாக மாறிவிடும் என தெரிவித்துள்ளாா். இந்த நிகழ்ச்சியில் புத்தொழில் களத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
பால் சந்தையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது – பால்வளத்துறை அமைச்சர்