spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை2026ல் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி! அமித்ஷா அதிரடி பேட்டி! எடப்பாடிக்கு புது சிக்கல்!

2026ல் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி! அமித்ஷா அதிரடி பேட்டி! எடப்பாடிக்கு புது சிக்கல்!

-

- Advertisement -

2024 மக்களவை தேர்தல் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிமுக போட்டியிடும் இடங்களில் பாதி இடங்களை பாஜகவுக்கு வழங்க வேண்டும் என்று அமித்ஷா சொல்கிறார். அப்படி பார்த்தால் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

அமித்ஷா 2026ல் தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியுள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேர்காணல் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் என்றும், அதிமுகவை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக வருவார் என்றும் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பெயரை திட்டமிட்டு மறைத்து இருக்கிறார். கூட்டணி ஆட்சி என்றால் ஆட்சியில் பங்கு என்பது தான் அர்த்தமாகும். மோடி, 2019 தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பொறுப்பு வழங்கினார். தமிழ்நாட்டில் இருந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு தர அதிமுகவே சம்மதிக்கவில்லை. அதற்கு காரணம் இன்றைக்கு அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நாளைக்கு அதிமுக ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்திருக்கும். ஓபிஎஸ்-ன் வருத்தங்களில் அதுவும் ஒன்றாகும். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும். அப்போது என்டிஏ கூட்டணி ஆட்சி தான் என்று சொல்கிறார்.

we-r-hiring

ஆனால் அப்படி கிடையாது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி ஆட்சியே கிடையாது. திமுக ஆட்சி தான். ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சிதான். தேர்தலில் கூட்டணியாக நிற்கலாம். ஆனால் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவின் ஆட்சிதான். அப்போது அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்தாலும், அந்த ஆட்சியில் பாஜக பங்கு வகிக்கும் என்று அமித்ஷா சொல்கிறாரா? மற்றொன்று அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்கிறார். அது எடப்பாடி இல்லையா? என்கிற கேள்வி வரும். இந்த குழப்பங்கள் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன. அடுத்த மாதம் அமித்ஷா வரும்போதும் இது தொடரும்.

பாஜகவின் அரசியல் என்பது தேசிய அளவில் ஒற்றை வேட்பாளர் என்பது தான். அது பிரதமர் மோடி. நாளை அமித்ஷா பிரதமரானால், அமித்ஷா. அப்படி உள்ளபோது அகில இந்திய அளவில் ஒற்றை தலைமை. அந்த தலைமையை மாநிலத்திற்கும் கொண்டுவர வேண்டும். அதாவது மோடியின் திட்டங்களுக்கு ஓட்டு. அவர் என்ன நினைக்கிறாரோ அதற்கு ஓட்டு. ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் அப்படியான ஒரு சூழ்நிலை இல்லை. இங்கே ஒரு உள்ளூர் தலைவர். அந்த தலைவருக்கு வாக்குகள். மாநில கட்சியின் அதிகார எல்லை என்பது மாநிலத்திற்கு உள்ளாக தான் இருக்கும். அந்த கட்சிகள் ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு இடம் தராது. இதே அரசியலை பீகார், உத்தரபிரதேசத்திலும் பார்க்கலாம். மாநில கட்சிகள் Vs பாஜக என்றுதான் உள்ளது. பாஜக இந்தியா முழுவதும் ஒரே தலைவர். அவருக்கு வாக்கு வங்கி என்று போகிறார். ஆனால் வாஜ்பாய் காலத்தில் இப்படி இல்லை. மோடியின் காலத்தில் வந்துவிட்டது. இதுவே ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தங்களுக்கு எதிரானதாகும். மோடி என்கிற நபருக்கு வாக்குகளா? அல்லது இந்துத்துவா என்கிற சித்தாந்தத்திற்கு வாக்குகளா? என்று அமித்ஷா தெளிவாக பதில் சொல்லவில்லை. ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களின்படி இந்த வெற்றி மோடிக்கானதோ, அவருடைய அரசுக்கான வெற்றியோ கிடையாது. மத்திய அரசின் திட்டங்களின் வெற்றியாகும்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும், மத்திய அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்போம் என்று அமித்ஷா சொல்கிறார். தமிழ்நாடு அரசியலில் தன்னிச்சையாகவே தேர்தல் என்பது கலாச்சாரம் மற்றும் மாநில பண்பாட்டிற்கான யுத்தமாகும். மத்திய அரசின் திட்டங்களுக்கான வெற்றி என்கிறபோது, மாநில அரசும் நிறைவேற்றிய திட்டங்களை நிறைவேற்றி இருப்பார்களே? ஜெயலலிதாவின் திட்டம் என்பது பெண்களுக்கு தாலிக்கு தங்ம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது, தொட்டில் குழந்தை திட்டம் போன்வற்றுக்கு வெற்றி கிடையாதா? இந்த திட்டங்களை எல்லாம் மக்களிடம் சொல்லி வாக்கு கேட்பீர்களா? இல்லையா?

மாநில தேர்தலில் நடப்பு திமுக ஆட்சியின் நிறைகுறைகள். அதற்கு முன்னதாக அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அவர்கள் ஆட்சியின் நிறைவு இவற்றை எல்லாம் ஒப்பிட்டுதானே வாக்கு கேட்க முடியும். எப்படி பாஜக ஆட்சியின நிறை அல்லது வெற்றிகளை சொல்லி தேர்தலில் வாக்கு சேகரிக்க முடியும்?. அமித் ஷாவுக்கு, தமிழ்நாடு அரசியலை பொறுத்தவரை வேறு மாதிரியான சிந்தனை உள்ளது. தமிழ்நாடு அரசியலின் மைய நீரோட்டம் என்பதுவேறு. 2019 தேர்தலுக்கு இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி, அதிமுக ஆட்சி என்று சொன்னார். 2021 தேர்தலில் முருகன், எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. நாங்கள் கை காட்டுபவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பார்கள். இதனை அதிமுக கடுமையாக எதிர்த்தது.

அதிமுக கூட்டணி என்பது மனச்சுமை கூட்டணியாகும். எப்போதும் எதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இன்றைக்கு அமித்ஷா சொன்னார். சில மாதங்கள் கழித்து ராஜ்நாத் வந்து இதேபோன்று எதாவது சொல்வார்.  அதற்கு பிறகு கட்கரி வந்து ஏதாவது சொல்வார். அது அவர்களின் கொள்கையாகும். அவர்கள் இப்படிதான் வாக்கு அரசியலை பார்க்கிறார்கள். அவர்களை வழித்துணையாக கொள்ள வேண்டும் என்றால்? அவர்களுக்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்க வேண்டும். அந்த வாக்குகள் நமக்கு மாற்றம் ஆக வேண்டும்.

ஒரு தொண்டனாக பாஜகவிற்கு உழைக்க தயாா்: அண்ணாமலை அறிவிப்பு!

அண்ணாமலை கணக்கின்படி தங்களுக்கு 10 சதவீத வாக்குகள் உள்ளதாக சொல்கிறார். அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் பாதியை தர வேண்டும் என்கிறார். அமித்ஷாவின் கணக்கும் அதுவாக தான் உள்ளது. அப்படி என்றால் கூட்டணி ஆட்சி என்று சொல்கிறார். 234 தொகுதிகளில் சராசரியாக அதிமுக 140 தொகுதிகளில் நின்றால் 70 தொகுதிகளில் பாஜக நிற்க வேண்டும். 210 தொகுதிகள். எஞ்சியுள்ள இடங்களை மற்ற கட்சிகளுக்கு தருவார்கள். மக்களவை தேர்தலை அடிப்படையாக வைத்து பார்த்தால் அப்படிதான் வரும். ஆனால் சட்டமன்றத் தேர்தல் வேறு, மக்களவை தேர்தல் என்பது வேறு. முன்கூட்டியே தேர்தல் கூட்டணி வைத்ததுதான் இந்த பிரச்சினைகளுக்கு காரணமாகும். அப்படி கூட்டணி வைக்காவிட்டால், அவர்கள் எது பேசினால் அதிமுக என்ன என்று இருந்திருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ