spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் அவல நிலையில் திராவிட மாடல் அரசு…எடப்பாடி விமர்சனம்

வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் அவல நிலையில் திராவிட மாடல் அரசு…எடப்பாடி விமர்சனம்

-

- Advertisement -

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்தாா்.வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் அவல நிலையில் திராவிட மாடல் அரசு…எடப்பாடி விமர்சனம்மேலும், செய்தியாளா் சந்திப்பில் அவா் அளித்த பேட்டியில், ”திமுக ஆட்சியில் சிறுமி முதல் முதியவர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவது தான் சுற்றுப் பயணத்தின் நோக்கம். இந்த சுற்றுப்பயணத்தால் மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு பெருகும். கூட்டணியில் இருப்போருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். தேமுதிக ஜனவரியில் தான் தங்களது கூட்டணி அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறியுள்ளனர். எல்லா கட்சிகளும் தங்களை வளர்த்துக் கொள்ள விமர்சிப்பது இயல்பு தான், த வெ க கட்சித்  தலைவா் விஜயும் அந்த அடிப்படையில் அதிமுகவை விமர்சித்துள்ளார். திமுகவை எதிர்க்கும் அனைத்து  ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், எங்களுடன் அவர்கள் அனைவரும் வந்தால் மகிழ்ச்சி.

அமித்ஷா வருகையின் போது கூட்டணி குறித்து தெளிவாக கூறிவிட்டார். அதிமுக தலைமையில் கூட்டணி என்றும், அதிமுக தலைமையில் ஆட்சி, முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் அமித்ஷா கூறி விட்டார். பாஜகவில் டெல்லி தலைமைதான் முடிவெடுக்க முடியும். அமித்ஷாவே கூறிய பிறகு அது குறித்து, அந்த கட்சியின் மற்ற நிர்வாகிகளில், யார் பேசினாலும் சரியல்ல என்பதே என் கருத்து. மடப்புரம் கோவில் காவலாளிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அது குறித்த எங்கள் வழக்கை விசாரிக்க தனி நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

நான் சிவகங்கை மாவட்டத்திற்கு பிரசாரம் செல்லும் போது அஜித்குமார் தாயாரை சந்திப்பேன். அதிகாரத்தில் இருப்போர் கூறியதாலேயே அந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் யார் என்பதை வெளிச்சத்திற்கு சிபிஐ கொண்டு வர வேண்டும். இரட்டை இலை குறித்து ஏற்கெனவே உச்ச  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. நீதிமன்ற வழக்கு குறித்து இங்கு விவாதிக்க கூடாது. அதிமுக – பாஜக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வீடு வீடாக சென்று கதவை தட்டி உறுப்பினர்களை சேர்க்கும் அளவு ஸ்டாலின் தலைமையிலான திமுக பரிதாபமாகிவிட்டது. அதிமுக பெரும்பான்மையாக வென்று ஆட்சி அமைத்த பிறகு ஸ்டாலின் எனது வீட்டுக்கு வந்தால் வரவேற்பேன்” என்று கூறினாா்.

நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…

MUST READ