spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅஜித்குமார் வழக்கறிஞர் திடீர் வேண்டுகோள்!  நிகிதாவுக்கு எதிராக மாணவிகள்!

அஜித்குமார் வழக்கறிஞர் திடீர் வேண்டுகோள்!  நிகிதாவுக்கு எதிராக மாணவிகள்!

-

- Advertisement -

லாக்அப் மரணங்கள் நிகழ்கின்றபோது அதில் உயர் அதிகாரிகள் அழுத்தம் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி அஜித்குமார் கொலையில் நிச்சயம் உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கும் என்று ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அஜித்குமார் வழக்கின் விசாரணை குறித்தும், புகார் அளித்த நிகிதாவின் குற்றப் பின்னணி குறித்தும் ஆய்வாளர் கிருஷ்ணவேல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. நகை காணமல் போனதாக குற்றம் சாட்டினார்கள். அதற்கு புகார் தெரிவித்தார்களா என்றால்? முதலில் கொடுக்கவில்லை என்றனர். பின்னர் சிஎஸ்ஐஆர் எண் கொடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் ஒரு தகவல் தெரிவித்துள்ளார். எங்கெல்லாம் லாக்அப் மரணங்கள் நடைபெற்றுள்ளதோ அங்கு கண்டிப்பாக மேல் அதிகாரிகளின் தலையீடு இருந்திருக்கிறது என்று சொல்லியுள்ளார். அவர் லாக்அப் டெத்துகள் தொடர்பாகவே தன்னுடைய ஆய்வினை மேற்கொண்டார். நிகிதா நகையை பறிகொடுத்ததாக சொல்கிறார். அவர் இது தொடர்பாக பேட்டி அளித்தபோது எதற்காக முகத்தை மூடிக்கொண்டு பேட்டி அளிக்கிறார்? நிகிதாவின் பின்னணி குறித்து விசாரிக்கிறபோது, அவருடைய தந்தை துணை ஆட்சியராக பணிபுரிந்துள்ளார். அவரது தாயார் ஒரு அரசு ஊழியர். நிகிதா அரசுக்கல்லூரில் துறை தலைவராக இருக்கிறார். அது மட்டுமின்றி அந்த கல்லூரி மாணவிகள், நிகிதா தங்களுக்கு வேண்டாம் என்று புகார் அளித்துள்ளனர். அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியை போன்ற வேலையை செய்யக்கூடியவர் இவர் என்றும் ஒரு குற்றச்சாட்டு எழுகிறது. கல்லூரி மாணவிகள் தங்களது துறைக்கு வேண்டாம் என்று சொல்லி புகார் அளித்திருக்கின்றனர். மற்றொன்று அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக அவர் இருக்கிறார்.

நிகிதா என்பவர் யார் என்றே தெரியாது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்போது அஜித்குமார் விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி மட்டத்தில் அழுத்தம் கொடுக்க இவருக்கு எப்படி தொடர்பு இருக்கும். தராசு ஷ்யாம் சொல்வது போல சாதாரண திருட்டு வழக்கு என்றால் விசாரணை வேறு விதமாக இருக்கிறது. உயர் அதிகாரிகளின் அழுத்தம் கொடுக்கிறபோது அங்கு மரணம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோம் என்றால் இங்கே கண்டிப்பாக ஒரு உயர் அதிகாரியின் அழுத்தம் இருந்திருக்கிறது. வீல் சேரை தள்ளிச்செல்வது தொடர்பாக பிரச்சினையில் அஜித்குமார் மீது, நிகிதா புகார் அளித்துள்ளார். நிகிதா மேலதிகாரிக்கு போனில் பேசி,அதன் மூலமாக வேலையை செய்ய வைக்கக்கூடிய அளவுக்கு நிகிதாவுக்கு செல்வாக்கு எப்படி வந்தது. அவர் குடும்பத்தின் மீதே 8 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி வழக்குகள் உள்ளன. அந்த பெண் கல்லூரியில் படிக்கும் போதே 16 லட்சம் பணம் வாங்கியுள்ளார். பாஜக ஆதரவாளரான திருமாறனை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். அதுவும் அவர் திருமாறனை 4வதாக தான் திருமணம் செய்திருக்கிறார்.

"அரசமைப்புக்கு எதிரானது"- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 

அஜித்குமார் மரணம் நடைபெற்ற 2வது நாளிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து முடித்துவிட்டார். ஆனால் சாத்தான்குளம் தந்தை – மகன் காலை வழக்கில் 15 நாட்களுக்கு பின்னர் தான் வழக்கு பதிவு செய்தனர். அதிலும் கொடுமை என்ன என்றால் நீதிமன்றம் தலையிட்டு, அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து ஒரு காவல் நிலையத்தை ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் வழங்குகிறார்கள். அப்படிபட்ட ஒரு கேவலம் நடைபெற்றது. அதையும், அஜித்குமார் மரணத்தையும் எப்படி ஒப்பிட முடியும். சாத்தான் குளம் தந்தை மகன் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து போராட்டம் நடத்திதனார்கள். சாத்தான் குளம் விஷயத்தில் கனிமொழி, உதயநிதி போன்றவர்கள்  போனார்கள். ஆனால் தற்போது முதலமைச்சர் நேரில் செல்லவில்லை எனகிறார்கள். அஜித்குமார் மரணம் தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால் அவர் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் சாத்தன்குளம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படததால் தான் துணை முதலமைச்சர் உதயநிதி தடையை மீறி சென்றார்.

அஜித்குமார் தரப்பில் வழக்கை நடத்துகிற வழக்கறிஞர் கணேஷ் குமார், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி விசாரணையே போதும் என்று சொல்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு அரசின் மீது இருக்கிற நம்பிக்கையில் அப்படி சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு, காவல்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த வழக்கை வெளிப்படையாக விசாரிக்க வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், மதுரை மாவட்ட நீதிபதி இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அஜித்குமார் கொலையில் நேரடியாக காவல்துறை அதிகாரியை நியமித்து விசாரணை மேற்கொண்டால் குளறுபடிகள் ஏற்படும். நீதிமன்றம், அதிகார வர்க்கத்திற்கு வெளியில் இருக்கும் ஒரு அமைப்பாகும். அப்போது காவல் துறையினரால் வழக்கில் தலையிட முடியாது. உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் ஸ்டெர்லைட் வழக்கில் குற்றவாளிகளை தப்ப வைத்தது போன்று இதிலும் செய்ய வைத்துவிடுவார்கள்.

இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. சிபிஐ சிறிது தாமதமாக விசாரணையை தொடங்கினாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களே விசாரிக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவம் நடைபெற்று ஒன்றரை மாதங்களுக்கு பிறகுதான் சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது காவல்துறை தாங்களும் விசாரிப்பதாக கூறியபோது நீதிமன்றம் அதை தடை செய்தது. ஏனென்றால் அவர்கள் விசாரணை என்கிற பெயரில் சாட்சியங்களை கலைக்கக்கூடிய வேலையை செய்திருப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ