spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅவசரப்பட்ட விஜய்! திமுக - அதிமுக சண்டையில் காணாமல் போகும் தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!

அவசரப்பட்ட விஜய்! திமுக – அதிமுக சண்டையில் காணாமல் போகும் தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய் தேர்தலில் 10 முதல்  15 சதவீத வாக்குகளை வாங்கினாலே பெரிய வெற்றியாகும் என்றும், அவர் வாங்குகிற ஒவ்வொரு வாக்கும் திமுகவுக்கு லாபம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

தவெக செயற்குழு கூட்டத்தில் திமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் அறிவித்துள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில்:- பாஜக உடன் கூட்டணி இல்லை என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பல முனை போட்டி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, விஜய் மற்றும் சீமான் என்று நான்கு முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது. இது திமுகவுக்கு சாதகமாகும்.

we-r-hiring

அதேவேளையில் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு பேர வலிமை கூடும். சிபிஎம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒரு போதும் விஜய் கூட்டணிக்கு செல்லாது. ஏனென்றால் அவர்களுக்கு தேசிய அரசியல் உள்ளது. அதற்கு எம்.பி-க்களின் ஆதரவு வேண்டும். அதேபோல் விடுதலை சிறுத்தைகளும் ஒருநாளும் விஜயிடம் கூட்டணிக்கு போகாது. ஏனென்றால் அவர்கள் கட்சிக்கு அங்கீகாரம் வாங்கி விட்டார்கள். அப்போது கூடுதல் எம்.எல்.ஏக்கள் வாங்குவதுதான் அவர்களது நோக்கமாக இருக்கும்.

முதலில் ரவிக்குமார், ராமதாஸ் திருமாவளவன் குறித்து பேசியது தனக்கு நெகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். அதேவேளையில் செல்வப்பெருந்தகை சந்திப்புக்கு பின்னர் ரவிக்குமார் அவருக்கு கண்டனம் தெரிவித்தார். ஏனெனில் ராமதாஸ் பாமக கூட்டணி வந்தால் கூடுதல் இடங்கள் அவர்களுக்கு தர வேண்டிய சூழல் ஏற்படும். பாமக கொறடா விவகாரம் தற்போது சட்டமன்றத்திற்கு போய்விட்டது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு போய்விட்டது. திமுக நினைத்தால் சட்டப்படி இரண்டு பாமக ஆகிவிடும். அரசியல் ரீதியாக எது அவர்களுக்கு லாபமோ அதைதான் திமுக செய்யும்.  ரவிக்குமாரின் பதற்றம் என்பது, பாமக கூட்டணிக்குள் வந்தால் தங்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்காதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

"தி.மு.க.விடம் 3 தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம்"- தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி!

இன்றைய தேதிக்கு விஜய் 2026 தேர்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதுதான் தனது பாதை என்று முடிவு செய்துவிட்டார். தற்போது களத்தில் திமுக, அதிமுக என 2 அணிகள் தான் இருக்கின்றன. அதிமுக அணியில் பாஜக உள்ளது. பாஜக பேசுவது இந்து தேசியவாதமாகும். அதில் இந்தியை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு பெரிய மகாராஷ்டிரா இதை எதிர்க்கிறது. பாஜகவுக்கான எதிர்ப்பு என்பது அவர்கள் ஒற்றை கலாச்சாரத்தை உயர்த்திப்பிடிப்பதால் வருகிறது. அதில் இருந்து அவர்கள் பின்வாங்க மாட்டார்கள். ஏனென்றால் அதுதான் அவர்களின் வாக்கு  வங்கி.  பாஜக உடன் கூட்டணி சேரும் கட்சிகள் எல்லாம் கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று சொல்லலாம். ஆனால், வாக்காளர்களின் அடி மனதில் சித்தாந்த உணர்வு உள்ளது. 100ல் 5 பேருக்கு தான் சித்தாந்த உணர்வு உள்ளது. ஆனால் அந்த 5 சதவீதம் பேர்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள்.

தமிழ்நாடு வாக்கு வங்கியில் தேசிய வாக்கு வங்கி காங்கிரஸ் காலத்திலேயே இருந்தது. 1967 சட்டமன்றத் தேர்தலில் பக்தவட்சலம் முதலமைச்சர் வேட்பாளர் கிடையாது. காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த காமராஜர் விருதுநகர் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டார். அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று மக்கள் நினைத்துக் கொண்டார்கள். அதேபோல் அண்ணாவும் முதலமைச்சர் வேட்பாளர் கிடையாது. யார் முதலமைச்சர் என்பதை மக்கள்தான் முடிவு எடுப்பார்கள் என்று அவர்கள் ஒதுங்கி கொண்டார்கள். தற்போது விஜய் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லியுள்ளார். அப்போது விஜய் கட்சியினரை போன்று இருந்தால்தான் அவரை தூக்கி சுமப்பார்கள்.  விஜயை தூக்கி சுமக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு மனநிலை வேண்டும். விஜய் 10 – 15 சதவீத வாக்குகளை வாங்கினாலே பெரிய வெற்றியாகவே கருதுவேன். எவ்வளவு சீட்டுகள் கிடைக்கப்போகிறது என்று தெரியாது. ஆனால் விஜய் வாங்குகிற ஒவ்வொரு வாக்கும் திமுகவுக்கு லாபமாகும்.

விஜயிடம் சிறிய சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வரும். அந்த கட்சிகளுக்கு மாநிலம் தழுவிய வாக்கு வங்கி இருக்காது. அப்போது விஜய் முதலமைச்சர் ஆக குறைந்த பட்சம் சில வருடங்கள் பாடுபட வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்களோடு மக்களாக களத்தில் நிற்க வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் எங்கு நேரம் உள்ளது? அவரே செப்டம்பரில் தான் வருவேன் என்கிறார். நவம்பர், டிசம்பரில் மழை அடித்து ஊற்றும். பீகார் மாநிலத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. அங்கு மழைக்காலமாக உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இந்த பணிகளை செய்கிறது. இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும்.

2 கோடி வாக்காளர்களை மறுஆய்வு செய்கிறோம் என்றால், அவர்களை இல்லாமல் ஆக்க போகிறார்கள் என்றுதான் அர்த்தமாகும்.  தமிழ்நாட்டிற்கு அந்த பிரச்சினை வருகிறபோது விஜய் சுற்றுபயணம் போய் கொண்டிருப்பாரா? மற்ற கட்சிகள் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளனர். இதனை எதிர்கொள்ள திமுக, அதிமுக மாற்று வழிகளையே செய்திருப்பார்கள். அப்போது என்னை பொருத்தவரை விஜய் 2026க்கு பதிலாக அடுத்த தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ