spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை விளக்கம்

தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை விளக்கம்

-

- Advertisement -

கடலூர் காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை விளக்கம்

இன்று காலை 7.45 மணி அளவில் மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி வேன், கடலூர் ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது வேன் மீது விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியது. தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் ஆய்வு மேற்க் கொண்டு வருகின்றன். பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

கேட் கீப்பர் பாதுகாப்பு விதிகளை மீறியதால், அவர் இப்போது இடைநீக்கம் செய்யப்பட்டு, தற்போதுள்ள நடைமுறையின்படி சேவையிலிருந்து நீக்கப்படுவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தெற்கு ரயில்வே துறை தனது முதல் தகவல் அறிக்கையில்,”உயிர் இழப்பு மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரயில்வே ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது.  ரயில்வே கேட்டை மூட முயற்சி செய்த போது பள்ளிக்கு சீக்கிரம் செல்வதற்காக வேன் டிரைவர் திறக்க வலியுறுத்தியதால் கேட் கீப்பர் கதவைத் திறந்தார். வேன் கடந்து செல்லும் வரை கேட்டை மூட வேண்டாம் என ஓட்டுநர் வலியுறுத்தியதாகவும் வேன் சென்ற பிறகு ரயில்வே கேட்டை மூடுமாறு கூறியுள்ளாா். ரயில்வே ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பு விதிகளின்படி அவர் வாயிலைத் திறந்திருக்கக் கூடாது என விளக்கம் அளித்துள்ளது”.

ரயில் மோதியதில் வேனில் இருந்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் , 6 மாணவர்கள் படுகாயமடைந்து ஜிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளையும் ரயில்வே மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர், தேவைப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு மாற்றப்படுவார்கள்.

மாணவன் செழியன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2.5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இரயில்வே மூலம் வழங்கப்படும்.

காமராஜரை பலி கொண்ட காங்கிரஸை, தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு செல்வபெருந்தகை முயற்சி செய்யலாமோ…

MUST READ