spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயை பார்க்க ஆதவ்க்கே தடை! தவெக போராட்ட ஸ்க்ரிப்ட் அம்பலம்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விஜயை பார்க்க ஆதவ்க்கே தடை! தவெக போராட்ட ஸ்க்ரிப்ட் அம்பலம்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

-

- Advertisement -

திருப்புவனம் அஜித்குமார் மரணம் மற்றும் சாத்தான்குளம் தந்தை – மகன் மரணத்தில் உள்ள வேற்றுமையை விஜய் புரிந்துகொள்ளவில்லை. கஸ்டடியல் டெத் விவகாரத்தை வைத்து திமுக அரசின் மீது ஏதேனும் குறைகளை கண்டு பிடிக்க முடியுமா? என்பது தான் அவரது நோக்கம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக ஆட்சியில் நடைபெற்ற காவல் மரணங்களை கண்டித்து விஜய் நடத்திய போராட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பொதுவாக எதிர்க்கட்சிகள் என்பது, ஆளுங்கட்சியின் குறைகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்டி மக்கள் மன்றத்தில் முன்வைத்து போராட்டம் நடத்துவது சரியானது. ஆனால் விஜய்க்கும், தவெகவுக்கும் அப்படி ஒரு நோக்கம் உள்ளதா? என்று தெரியவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க விஜய், இதுபோன்ற போராட்டங்களை ஒரு அடையாள வடிவத்தில் கட்டமைக்கிறார்கள். அதில் அவர்களுக்கு உள்ளூர பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கம் உள்ளதா? என்றால் கிடையாது.

தவெக ஆர்ப்பாட்டத்தில் கூட விஜய் வைத்திருந்த பேனர் சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்பதாகும். ஆனால் மேடையில் பேசிய விஜய், அஜித்குமார் மரணத்திற்கு சாரி கேட்டதுபோல, காவல்துறையினரால் உயிரிழந்த 24 குடும்பங்களுக்கும் சாரி கேட்க வேண்டும். அவர்களுக்கும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு காரணம் போலீசாரின் கொட்டடி கொலைகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கமோ, அரசியல் ரீதியான பார்வையோ விஜய்க்கு கிடையாது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்கிற முழக்கத்தையும் முன்வைக்கிறார்கள். விஜய் பேசுகிறபோது நான், போலீஸை குற்றம் செல்ல மாட்டேன். உள்துறையை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் முதலமைச்சர் தான் பொறுப்பு என்று சொல்கிறார். இதேபோல் எடப்பாடி, நயினார், அண்ணாமலை போன்றவர்களும் பேசுகிறார்கள். அதன் பொருள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றால் போலீசுக்கு அதிக அதிகாரம் கொடுங்கள் என்பதுதான். போலீசாரின் அதிகாரத்தில் அரசு தலையிட்டால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதுதான் பொருள்.

அஜித்குமார் மரணம் போலீஸ் தலையீட்டால்தான் நடைபெற்றது. அப்போது போலீசாரின் அதிகாரங்கள் சட்டப்படி வரையறுக்க வேண்டுமா? அல்லது போலீசார் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டுமா? என்பதில் அவர்களுக்கு தெளிவு கிடையாது. போலீஸ் என்கிற இயந்திரம் மிருகத்தனமாக தான் இருக்கும். அந்த இயந்திரத்தை மாற்ற முடியாது. அது மக்களுக்கு, சட்டத்திற்கு, நீதித்துறைக்கு நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்கிற பார்வையை முன்வைத்தால் மட்டும்தான் இதை தடுத்து நிறுத்த முடியும்.

ஆதவ் அர்ஜுனா காவல்துறை மரணங்கள் 31 என்று சொல்கிறார். விஜய் 24 என்று சொல்கிறார். இந்த கணக்குகளுக்கு எல்லாம் என்ன ஆதாரம் உள்ளது. அடுத்தபடியாக பாதிக்கப்பட்டவர்களை அழைத்துவந்து, அவர்களுக்கும் நிவாரணம் வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்போது, விஜயின் நோக்கம் என்ன? ஹென்றி திபேன் போன்ற மனித உரிமைகள் ஆர்வலர்கள் வலியுறுத்துவது போல காவல்துறை துன்புறுத்தல்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு கிடையாது. விஜயின் நிலைப்பாட்டில் தெளிவு கிடையாது. பச்சையான அரசியல் சந்தர்ப்பவாதம் மட்டும்தான் தெரிகிறது.

அஜித்குமார் மரணம் மக்களால் பெரிய அளவில் பேசப்பட்டதற்கு காரணம் அது கொடூரமாக நடைபெற்ற கொலை. லாக்அப் மரணங்கள் பல நடைபெற்றிருந்தாலும், ஒரு சிலவை பேசப்படுவதற்கு காரணம் அதன் கொடூரத்தன்மையாகும். இந்த விகாரத்தில் அரசுக்கு எதிரான எதிர்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக அவர்களை எல்லாம் வரவழைத்து பேசுகிறார். இது மட்டும்தான் நடைபெற்றுள்ளது.

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பென்னிக்ஸ், ஜெயராஜ் படுகொலையை எடப்பாடி பழனிசாமி நியாயப்படுத்தினார். மூச்சுத் திணறல் காரணமாகவே அவர்கள் உயிரிழந்தார்கள் என்று சொன்னார். எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் போராட்டம் வந்த பின்னர் தான் அது கொட்டடி கொலை என்பது தெரியவந்தது. ஆனால் அஜித்குமார் வழக்கில் உடனடியாக காவல்துறை லாக்அப் மரணம் என்று ஒப்புக்கொள்கிறது. சம்பந்தப்பட்ட நபர்களை சஸ்பெண்ட் செய்ததுடன், கொலை வழக்குப்பதிவு செய்து கைதுசெய்கிறார்கள். மேலும் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடுகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையிலான வேற்றுமையை விஜய் பார்க்கவில்லை. அல்லது புரியவில்லை.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாக எடப்பாடி சொன்னார். ஆனால் இந்த ஆட்சியில் சம்பவத்திற்கு உடனடியாக பொறுப்பேற்கப்படுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக வெள்ளையர் காலத்தில் இருந்து இருக்கக்கூடிய காவல் துறையினரின் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அதுபோன்ற பார்வை விஜயிடம் இல்லை. இதை வைத்து  திமுக அரசின் மீது குற்றம், குறைகளை கண்டுபிடிக்க முடியுமா? என்பதுதான் அவரது நோக்கமாகும்.

விஜயின் 3 நிமிட பேச்சாக இருக்கட்டும், ஆதவ் அர்ஜுனா பேச்சாக இருக்கட்டும், விஜய் பஞ்ச் டயலாக் போல பேசியதற்கு தான் அவர்கள் கைத்தட்டினார்கள். மற்றபடி காவல் நிலையத்தில் இறந்தவர்களுக்கான சோக உணர்வு கொண்ட ஆர்ப்பாட்டமாக இல்லை. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிற விஜய் கட்சி, இந்த முறையும் தங்களுடைய தொண்டர்களை சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு முறைப் படுத்துவதை இந்த முறையும் செய்யவில்லை. இந்த முறையும் புஸ்ஸி ஆனந்த், மரத்தில் ஏறாதே, பேரி காடை இடிக்காத என்றுதான் திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருந்தார். நீதிமன்ற உத்தரவை மீறி வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளார்கள். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி, ஆளுகின்ற அரசை நோக்கி குறைகளை சுட்டிக்காட்டுகிற போராட்டமாக இது அமையவில்லை. மற்றொரு ஈவென்ட் மேனேஜ்மெண்ட் ஆக தான் அமைந்துள்ளது.

தவெகவை பொருத்தவரை விஜய் வந்து ஒரு சோசியல் மீடியா இன்புளுயன்சராக தான் அந்த கட்சிக்கு பயன்படுகிறார். அது ஒரு அரசியல் கட்சியினுடைய எந்த ஒரு இலக்கணத்திற்கும் பொருந்தாது. தேர்தலில் போட்டியிட ரூ. 2 கோடி கட்சிக்கு தர வேண்டும். தேர்தலுக்கு ரூ.20 கோடி செலவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இது நடைமுறை சாத்தியமா? இவை தர்விர்த்து கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கும் காசு வாங்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். தவெகவுக்கு விஜய் தலைவராக உள்ளார். இதுபோன்று ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நடைபெறுகிறபோது வந்து பேசிவிட்டு செல்கிறாரே தவிர, கட்சி முழுவதும் புஸ்ஸீ ஆனந்த் கட்டுப்பாட்டில் உள்ளதாக சொல்கிறார்கள். அங்கு அறிவார்ந்த தலைவர்களோ, பேச்சாளர்களோ, செய்தித் தொடர்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு

நபரை மையமாக வைத்து கட்சி நடத்தப்படுகிறபோது, அதில் இயல்பாகவே ஒரு சர்வாதிகாரத் தன்மை வந்துவிடும். விஜயை சில நிமிடங்கள் காட்ட வேண்டும். அவர் சில நிமிடங்கள் பேச வேண்டும். இதை வைத்துக்கொண்டே கட்சியை தேர்தலில் போட்டியிட வைத்து, வெற்றி பெற்றுவிடலாம் என்று சுருக்கிவிட்டார்கள். சமூக வலைதளங்களை நம்பி, சினிமா கவர்ச்சியை நம்பி தவெக செயல்பட்டு வருகிறதே தவிர, அது திமுக – அதிமுகவுக்கு மாற்று என்பது ஏட்டுச் சுரக்காய் போன்றதுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ