spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌

மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌

-

- Advertisement -

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி. பெருந்தலைவர் வாழ்ந்த காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றவராக இருந்துள்ளார் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருந்தலைவர் காமராஜருக்கு புகழாரம்.மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி கிராமத்தில் எஸ்.பி.கே மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.‌ இன்று பெருந்தலைவர் காமராஜரின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருந்தலைவர் காமராஜரின் புதிய முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி,மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அதை யாரும் மாற்ற முடியாத வகையில் மறைந்த முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.‌ பெருந்தலைவர் காமராஜர் மறைந்ததும் அவருக்காக மணிமண்டபம் கட்டும் பணியில் முன்னணியில் இருந்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி.‌ பெரியார் கூட இப்படிப்பட்ட தலைவர்கள் இருந்தால் நாம் பாடுபட வேண்டிய அவசியம் இல்லை என பாராட்டிய தலைவர் தான் பெருந்தலைவர் காமராஜர். காமராஜர் இருந்த போது முந்தைய ஆட்சியாளர்கள் பள்ளிக்கூடங்களை மூடினர். காமராஜர் தான் பள்ளிக்கூடங்களை திறந்து மதிய உணவு திட்டங்களை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் என்பதை நாம் மறந்து விட முடியாது. காமராஜர் வாழ்ந்த காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்ற கூடிய தலைவராக வாழ்ந்துள்ளார்.‌ அவருடைய எளிமையை கண்டு பலரும் மிரண்டு போய் இருந்தனர் காமராஜரின் புகழை போற்றுவோம் என்று பேசினார்.

ரயிலில் தொலைந்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோன் மீட்பு

we-r-hiring

 

MUST READ